/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு தயாரான சிலைகள்
/
கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு தயாரான சிலைகள்
கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு தயாரான சிலைகள்
கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு தயாரான சிலைகள்
ADDED : அக் 25, 2025 03:57 AM

ராமநாதபுரம்: பெருவயல் கிராமத்தில் உள்ள ரெணபலி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்.,27 ல்(நாளை மறுநாள்) சூரசம்ஹாரம் நடைபெறஉள்ளது.
இதற்காக அசுரர்கள் சிலைகளை தயார் செய்யும் பணி நடந்தது.
ராமநாதபுரம் அருகே பெருவயல் கிராமத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோயில் உள்ளது.
இங்கு கந்தசஷ்டி விழா அக்.,22 ல் காப்புக்கட்டுதல் துவங்கி அக்.,28 வரை நடைபெறுது. விழாவில் தினமும் சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை சுவாமி உள்பிரகாரம் உலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக அக்.,27ல் கந்த சஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹாரம் மாலை 4:00 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிக்காக சூரபத்மன், கஜமுகாசூரன், சிங்கமுகாசூரன் சிலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மறுநாள் (அக்., 28ல்) திருக்கல்யாணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.---