sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

துாண்டில் வளைவு அமைக்க ஐ.ஐ.டி., குழு ஆய்வு

/

துாண்டில் வளைவு அமைக்க ஐ.ஐ.டி., குழு ஆய்வு

துாண்டில் வளைவு அமைக்க ஐ.ஐ.டி., குழு ஆய்வு

துாண்டில் வளைவு அமைக்க ஐ.ஐ.டி., குழு ஆய்வு


ADDED : ஜன 11, 2024 01:11 AM

Google News

ADDED : ஜன 11, 2024 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் உள்ளன. இவற்றை நிறுத்தி வைக்க முறையான கடல் பாதுகாப்பு கட்டுமானங்கள் இல்லை.

கடலில் நிறுத்தப்படும் படகுகள், காற்றில் சேதமடைகின்றன. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தங்கச்சிமடம் வடக்கு கடற்கரையில் மீன்பிடி இறங்குதளம், வலை பின்னும் கூடம் கட்டிக் கொடுக்கப்பட்டன.

துாண்டில் வளைவு இல்லாததால் பயனற்றுப் போயின. கடந்தாண்டு நடந்த மீனவர் நல மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் துாண்டில் வளைவு அமைத்து தரப்படும் என உறுதியளித்திருந்தார்.

அதன்படி துாண்டில் வளைவு துறைமுகம் அமைப்பதற்காக சென்னை ஐ.ஐ.டி., நிறுவன திட்ட அலுவலர் தரணிராஜ், மீன் வளத்துறை பொறியாளர் ஹரிஷ்குமார், கடற்கரை மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் சின்னத்தம்பி, ராயப்பன் ஆகியோர் குந்துகால் பகுதியிலிருந்து பாம்பன் வடக்கு கடல், தங்கச்சிமடம் வடக்கு கடல் பகுதிகளை நாட்டுப்படகுகளில் நவீன இயந்திரங்களை பொருத்தி கடலுக்குள் சென்று ஆய்வு செய்தனர்.

கடல் நீரோட்டம், ஆழம், பாறைகள் அமைப்பு, கடற்கரை அமைப்பு போன்றவற்றை ஆய்வு செய்தனர். பின் பாம்பன், தங்கச்சிமடம் கலந்தாய்வு கூட்டம் நடத்தி மீனவர்களின் கருத்து கேட்டனர்.

திட்டம் குறித்த அறிக்கையை ஐ.ஐ.டி., குழு அரசுக்கு வழங்கிய பின் துாண்டில் வளைவு துறைமுக பணிகள் விரைவில் துவக்கப்படும்.






      Dinamalar
      Follow us