ADDED : அக் 23, 2025 03:39 AM
ஆர்.எஸ்.மங்கலம்: மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கால்நடை வளர்ப்போர் பாதிப்படைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வீடுகளில் அதிகளவில் விவசாயிகள் வளர்க்கின்றனர். கடந்த சில மாதங்களாக நிலவிய வறட்சியால் கால்நடைகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் வகையில் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடப்பட்டன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் முளைத்துள்ளதால் கால்நடைகளை விவசாயிகள் கண்காணிப்பில் மேய்ச்சலுக்கு விடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது விவசாயப் பணிகள் அதிகம் உள்ள நிலையில் கால்நடைகளையும் முழுமையாக கண்காணிக்க வேண்டிய நிலை கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளதால் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழையால் கால்நடைகளை பராமரிப்பதிலும், உரிய இடத்தில் கால்நடைகளை அடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கால்நடை வளர்ப்போர் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.