/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சிகளில் ஜல்ஜீவன் திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள் வீணாகும் அரசு நிதி

ADDED : பிப் 03, 2025 04:59 AM
சிக்கல்: கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல ஊராட்சிகளில் ஜல்ஜீவன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தில் உள்ளூர் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வது தான் நோக்கம்.
இதற்காக வீடுகள் தோறும் குழாய்கள் இணைப்பு மற்றும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்திற்காக மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறது.
கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ஜல்ஜீவன் திட்டம் செயல்பாடின்றி முடங்கியுள்ளதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. கடலாடி பா.ஜ., கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்டாலின் கூறியதாவது:
கடலாடி ஒன்றிய ஊராட்சிகளில் செயல்படுத்தப்படாமல் உள்ள ஜல்ஜீவன் திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்திற்காக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டம் தான் என பெயரளவில் அதிகாரிகள் செயல்படுகின்றனர்.
இத்திட்டம் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. எனவே நிதி வீணடிப்பை தவிர்க்க அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.