/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நயினார்கோவிலில் 42 ஏக்கரில் பசுந்தாள் உரப்பயிர் தக்கை பூண்டு சாகுபடி மண்ணுயிர் காக்கும் திட்டம் மும்முரம்

ADDED : செப் 21, 2024 05:20 AM

நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவிலில் வட்டார வேளாண் துறை சார்பில் முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் 42 ஏக்கரில் பசுந்தாள் உரப் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நடப்பு சம்பா நெல் பருவத்திற்கு முன் தக்கைப்பூண்டு விதைகள் ஏக்கருக்கு 20 கிலோ வீதம் 1000 ரூபாய் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மாவட்ட வேளாண் துறை துணை இயக்குனர் (மாநிலத் திட்டம்) அமர்லால் கூறியதாவது:
பசுந்தாள் உரப்பயிரை நெல் சாகுபடிக்கு முன்பு சாகுபடி செய்து 45 நாட்கள் கழித்து சுழற்கலப்பை மூலம் மடக்கி விட வேண்டும். இதனால் மண்ணில் உயிர்ம கரிமச்சத்து அதிகரித்து மண் வளம் பெருகும். மேலும் தலைச்சத்து நிலை நிறுத்தப்படும். பயிருக்கு இட வேண்டிய ரசாயன உரத்தின் அளவை குறைத்து சாகுபடி செலவை குறைக்கலாம்.
தக்கை பூண்டு ஊடு பயிராக அடர்த்தியாக வளர்வதால் களைகள் வளர்வது தடுக்கப்படும். மண்ணின் களர் தன்மை நீங்கி மண் வளம் பெறும் என்றார்.
அப்போது கள்ளியடியேந்தல் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்ட தக்கை பூண்டு உரப்பயிரின் விதைப்பு, இளம் பருவம், மடக்கி உழுதல் ஆகிய நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நயினார்கோவில் உதவி இயக்குனர் பானுபிரகாஷ், உதவி தொழில் நுட்ப அலுவலர் இளையராஜா, உதவி வேளாண்மை அலுவலர்கள் நவீன் ராஜா, சுரேஷ் சர்மா உள்ளிட்டோர் இருந்தனர்.