/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் பரணி வெள்ளி மாளிகை திறப்பு
/
ராமநாதபுரத்தில் பரணி வெள்ளி மாளிகை திறப்பு
ADDED : அக் 28, 2024 04:49 AM

ராமநாதபுரம் : -ரமநாதபுரம் அலங்காச்சேரித் தெருவில் பரணி வெள்ளி மாளிகை திறப்பு விழா நடந்தது.
ஈரோடு பரணி வெள்ளி மாளிகை நிர்வாக இயக்குநர் மோகனசுந்தரம் வரவேற்றார். ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம் திறந்துவைத்தார். ராமநாதபுரம் முன்னாள் ஒன்றிய தலைவர் கிருஷ்ணன், வேலு மாணிக்கம் குழுமம் வேலு மனோகரன் முன்னிலை வகித்தனர்.
கனகமணி மருத்துவமனை டாக்டர் மதுரம் அரவிந்த், கீழக்கரை நகராட்சித்தலைவர் செஹனாஸ் ஆபிதா, வசந்தா கன்ஸ்ட்ரக்ஷன் பொறியாளர் கிேஷார், தேவிபட்டினம் ஊராட்சித்தலைவி ஹமீதியாராணி ஜாகிர் உசேன், பரணி வெள்ளி மாளிகை நிறுவனத்தை சேர்ந்த தெய்வமணி, கந்தசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
ராமநாதபுரம் வர்த்தக சங்கத்தலைவர் ஜெகதீசன் முதல் விற்பனையை துவங்கி வைத்தார். கீழக்கரை டாக்டர் பி.ஆர்.எல். சதக்அப்துல் காதர் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.
விழாவில் கீழக்கரை முகமது சதக் அறக்கட்டளை செயல் இயக்குநர் ஹாமீது இப்ராஹிம், தொழிலதிபர்கள் ராஜாங்கம், மூனா முகமது அப்துல் காதர், நாகநாதன், ராமேஸ்வரம் நகராட்சித்தலைவர் நாசர்கான், தொண்டி பேரூராட்சித்தலைவர் ஷாஜஹான் பானு, தொழிலதிபர்கள் செந்தில்குமார், கென்னடி, புத்தேந்தல் ஊராட்சித்தலைவர் கோபிநாத், யாதவ வர்த்தக சங்கத்தலைவர் பிரகலாதன், பொருளாளர் முத்துக்குமார், செயலாளர் ஜெயக்குமார், வி.கே., அன்கோ கதிரேசன் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை தேவிபட்டினம் ஸ்ரீகோகுலம் ஜூவல்லரி சரவணன் செய்திருந்தார்.