/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடி தர்காவில் குழந்தைகளை பயன்படுத்தி யாசகம் அதிகரிப்பு ... : கண்டுகொள்ளாத குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள்

ADDED : ஜூலை 26, 2025 11:29 PM

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ஏர்வாடி தர்கா பகுதியில் குழந்தைகளை பயன்படுத்தி யாசகம் பெறும் கும்பல் அதிகரித்துள்ள நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
ஏர்வாடி தர்காவிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள் வருகின்றனர். பல மாதங்களாக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து ஒரு வயது முதல் 10 வயதுள்ள குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டும், அவர்களை அனுப்பியும் ஏர்வாடி தர்கா வளாகப் பகுதி, ஊராட்சி பகுதிகளில் யாசகம் பெறும் கும்பல் அதிகரித்துள்ளனர்.
இதனால் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி மற்றும் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படுவதாக தன்னார்வலர்கள் வேதனை தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:
பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான யாத்ரீகர்கள் வழிபாட்டிற்காக ஏர்வாடி தர்காவிற்கு வருகின்றனர். அவர்களிடம் யாசகம் பெறும் நோக்கில் ஒரு சிலர் குழந்தைகள் மூலமாக யாசகம் பெறுகின்றனர். அதே வேளையில் யாத்ரீகர்களின் உடைமைகள், அலைபேசி, தங்க நகைகள் உள்ளிட்டவைகளை சிறுவர் மற்றும் சிறுமிகளை வைத்து திருடும் போக்கும் தொடர்கிறது.
சிறு வயது குழந்தைகளின் கல்வி, வாழ்வாதாரம் இவற்றை அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் உரிய முறையில் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சைல்ட் லைன் மூலமாக இது போன்று பராமரிப்பின்றி கல்வி வழங்க முடியாமல் இருக்கக்கூடிய குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கான இலவச கல்வி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விஷயத்தில் ஏர்வாடி தர்கா நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளனர் என்றார்.
--