/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவிபட்டினம் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு
/
தேவிபட்டினம் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு
ADDED : ஆக 02, 2025 11:00 PM
தேவிபட்டினம்,: கடற்கரை பகுதியான தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதால் இளைஞர்கள் பாதிப்படைகின்றனர்.
கஞ்சா விற்பனை செய்வோர், கடத்தலில் ஈடுபடுவோர் உள்ளிட்டோரை போலீசார் கண்காணிப்பு செய்து ஒருபுறம் நடவடிக்கை எடுத்தாலும், பெரும்பாலான பகுதிகளில் பரவலாகவே கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்களும், கஞ்சா புழக்கத்திற்கு அடிமையாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது கஞ்சா போதை உள்ளிட்ட பயன்பாடு அதிகரிப்பால் ஆங்காங்கே பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் தேவிபட்டினம் பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் மக்கள் வலி யுறுத்தி உள்ளனர்.
மேலும், பெற்றோர்களும் இளைஞர்களை கண்காணித்து அறிவுரை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

