ADDED : டிச 10, 2024 05:00 AM
திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தக் கூடாது என அரசு பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சிலர் சம்பளம் குறைவாக கொடுத்தால் போதும் என்ற லாப நோக்கத்தில் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்துகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு திருவாடானை அருகே கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 15 வயது சிறுவனை அதிகாரிகள் மீட்க சென்ற போது சிறுவன் தப்பி ஓடினார். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலை பார்க்கும் சிறுவர்கள் பலர் உள்ளனர்.
அதே போல் தொண்டியில் இயற்கை சீற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடலில் மீனவர்கள் இறக்கின்றனர். அந்த மீனவர்களின் வாரிசுகள் வேறு வழியின்றி மீன்பிடிக்க செல்ல வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர். இதில் சிறுவர்களும் மீன்பிடிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
எனவே குழந்தை தொழிலாளர்களை மீட்டு ஏழ்மை நிலையில் வாழும் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும்.