/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பசும்பொன்னில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு
/
பசும்பொன்னில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு
ADDED : அக் 30, 2024 04:23 AM

கமுதி : பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 117வது ஜெயந்தி, 62--வது குருபூஜை விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
நேற்று அரசியல் விழாவாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் ஜோதி எடுத்தும், பால்குடம், முளைப்பாரி, அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் கிராமங்களில் பசும்பொன் சென்று வர வசதியாக பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று பசும்பொன்னில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இன்று முதல்வர், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

