/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெற்பயிரில் நோய் தாக்குதல் அதிகரிப்பு
/
நெற்பயிரில் நோய் தாக்குதல் அதிகரிப்பு
ADDED : டிச 08, 2025 06:40 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆனந்துார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்த நிலையில் தற்போது மழை நின்று வெயில் முகம் காட்டியுள்ள நிலையில் தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக நெற்பயிர்களில் பூச்சி நோய் தாக்குதல் உள்ளது. தாக்குதலுக்கு உள்ளான நெல் வயல்களில் உள்ள நெற்பயிர்களின் தோகைகள், பூச்சிகளால் பச்சையம் உறிஞ்சப்பட்டு வெண்மை நிறத்தில் மாறியுள்ளன. இதனால், நெற்பயிர்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் குன்றி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பூச்சி நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

