sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 யூரியா உரத்துடன் இணை பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினால் உரிமம் ரத்து

/

 யூரியா உரத்துடன் இணை பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினால் உரிமம் ரத்து

 யூரியா உரத்துடன் இணை பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினால் உரிமம் ரத்து

 யூரியா உரத்துடன் இணை பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினால் உரிமம் ரத்து


ADDED : டிச 08, 2025 06:41 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: விவசாயிகளிடம் யூரியா உரத்துடன் வேறு உரங்களை வாங்குமாறு கட்டாயப்படுத்தினால் உர விற்பனை நிலையத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்துறை அறிவித்துள்ளது.

வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், பருத்தி, எண்ணெய் வித்து பயிர்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்களும், மிளகாய், தென்னை, காய்கறி போன்ற தோட்டக்கலை பயிர்களும் 1.69 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.

நெற் பயிர்களுக்கு மேலுரமிடுவதற்கு தேவையான யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்கள், அம்மோனியம் குளோரைடு, அமோனியம் சல்பேட் போன்றவை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியார் உர விற்பனை நிலையங்களிலும் விற்கப்படுகிறது. தனியார் உர விற்பனை நிலையங்களில் விவசாயிகள் யூரியா உரம் வாங்கும் போது இணை பொருட்களாக இதர உரங்கள், இயற்கை உரங்கள், உயிர் ஊக்கிகள் போன்றவற்றை வாங்க கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

விவசாயிகள் கேட்கும் உரங்களை மட்டும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது.

கூடுதல் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன் படி கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இது குறித்த புகார்களை விவசாயிகள் ராமநாதபுரம் 99528 42093, திருப்புல்லாணி, உச்சிப்புளி 79040 26400, திருவாடானை 93841 52659, ஆர்.எஸ்.மங்கலம் 95245 20909, பரமக்குடி 80721 33657, நயினார் கோவில் 94430 90564, போகலுார் 93458 97745, கமுதி 73731 73545, முதுகுளத்துார் 94436 42248, கடலாடி 63827 40475 எனும் அலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us