/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டியில் கடல் நீர் மட்டம் திடீர் உயர்வு
/
தொண்டியில் கடல் நீர் மட்டம் திடீர் உயர்வு
ADDED : டிச 08, 2025 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டியில் கடல் நீர் மட்டம் உயர்ந்ததால் மீனவர்கள் அச்சமடைந்தனர்.
தொண்டியில் கடந்த சில நாட்களாக கடல் நீர் மட்டம் அடிக்கடி உயர்ந்து வருகிறது. புதுக்குடி கிராமத்தில் உள்ள வீடுகள் மற்றும் மரைன் போலீஸ்ஸ்டேஷனை சில நாட்களுக்கு முன்பு கடல் நீர் சூழ்ந்தது. நேற்று மகாசக்திபுரத்தில் கடல் நீர் மட்டம் உயர்ந்தது.
கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் கடலுக்குள் வந்தன. அதிர்ச்சியடைந்த மீனவர்கள் படகுகளை நங்கூரம் இட்டு பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சில மணி நேரத்திற்கு பிறகு நீர் மட்டம் குறைந்தது.

