/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.பி.பட்டினத்தில் காய்ச்சல் அதிகரிப்பு
/
எஸ்.பி.பட்டினத்தில் காய்ச்சல் அதிகரிப்பு
ADDED : ஜன 04, 2024 01:57 AM
தொண்டி; எஸ்.பி.பட்டினத்தில் காய்ச்சல் அதிகரித்து வருவதால் நோய் ஒழிப்பு பணியை தீவிரபடுத்துவது அவசியமாகியுள்ளது. திருவாடானை தாலுகாவில் தொண்டி, நம்புதாளை, எஸ்.பி.பட்டினம், புதுப்பட்டினம் போன்ற பல்வேறு ஊர்களில் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. நம்புதாளையில் சில மாதங்களுக்கு முன்பு காய்ச்சலுக்கு ஆறு மாத குழந்தை பலியானது.
இது குறித்து எஸ்.பி.பட்டினம் பசீர் கூறியதாவது- காய்ச்சல் பாதித்தவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றால் போதிய டாக்டர்கள் இல்லாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியதுள்ளது. அன்றாட கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பாதிக்கபட்டுள்ளனர். போதிய டாக்டர்களை நியமனம் செய்து, டெங்கு ஒழிப்பு பணியாளர்களை கூடுதல் செய்து எஸ்.பி.பட்டினம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்றார்.