UPDATED : ஆக 19, 2026 04:45 PM
ADDED : ஆக 19, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
தேவிபட்டினம்:கிழக்கு கடற்கரை சாலையும், திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையும் இணையும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக தேவிபட்டினம் உள்ளது.
இவ்வழியாக ராமநாதபுரம் வழித்தடத்தில் செல்லும் வாகன எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. தேவிப்பட்டினத்தில் உள்ள நவபாஷாண நவக்கிரகத்திற்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும், முக்கிய சாலைகளின் இரு ஓரங்களிலும், ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டின் இரு ஓரங்களிலும் உள்ள ஆக்கிரமப்புகளை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
