/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பருவகால காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
/
பருவகால காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு
ADDED : ஜன 19, 2025 04:54 AM
திருவாடானை: பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் சளி, இருமலுடன் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. திருவாடானை, தொண்டி பகுதியில் சாரல் மழை பொழிவும், குளிரும் அதிகமாகி வருகிறது.
இதனால் பருவகால நோய் தொற்று ஏற்பட்டு சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளது. குளிர்ந்த சீதோஷ்ண நிலை, ஈரப்பதம் காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் பசீர் கூறியதாவது:
எஸ்.பி.பட்டினத்தில் ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் வீதம் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகமான பாதிப்பு உள்ளது. எனவே சுகாதாரத்துறையினர் முகாம் நடத்தி ரத்தம், சளி மாதிரிகளை சேகரித்து எந்த வகையான காய்ச்சல் என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.
சுகாதாரத்துறையினர் கூறுகையில், காய்ச்சல் தொடர்பான சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். அதிக பனி இருக்கும் சமயத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
கட்டாயம் முகக்கவசம் அணிந்து பிறருக்கு தொற்று பாதிப்பு ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும் என்றனர்.

