/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மணற்பாங்கான இடங்களில் எள் சாகுபடி அதிகரிப்பு
/
மணற்பாங்கான இடங்களில் எள் சாகுபடி அதிகரிப்பு
ADDED : பிப் 01, 2024 11:02 PM

ரெகுநாதபுரம் --ரெகுநாதபுரம் சுற்றுவட்டார கிராமங்களான சக்திபுரம், நைனாமரைக்கான், பத்திராதரவை, பருத்திக்காட்டு வலசை, வைரவன் கோவில், புதுக்கோவில், தினைக்குளம் உள்ளிட்ட நல்ல மணற்பாங்கான பகுதிகளில் எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
எண்ணெய் வித்து பயிரான எள் சாகுபடியில் உரிய முறையில் பராமரித்து வளர்க்கப்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஈட்டப்படுகிறது. எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது:
மழை நீரை உறிஞ்சி தன்னகத்தே வைத்துள்ள மணற்பாங்கான பகுதிகளில் எள் விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது எள் செடிகளில் இருந்து வெள்ளை நிற பூக்கள் பூத்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் செடிகளில் எள் கிடைக்கும். இவற்றை உரிய முறையில் பறித்து உலர்த்தி எள் எடுக்கிறோம்.
வீட்டு தேவைகளுக்காகவும், விற்பனைக்காகவும் செக்குகள் மூலம் அரைக்கப்படும் நல்லெண்ணெய்யை பயன்படுத்துகிறோம். இப்பகுதி நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக எள் விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளது என்றனர்.

