/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓட்டல்களில் கலப்பட தேயிலை பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
/
ஓட்டல்களில் கலப்பட தேயிலை பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
ஓட்டல்களில் கலப்பட தேயிலை பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
ஓட்டல்களில் கலப்பட தேயிலை பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
ADDED : பிப் 21, 2025 06:52 AM
சாயல்குடி: கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டல்களில் லேமினேஷன் செய்யப்பட்ட பச்சை நிற பிளாஸ்டிக் பேப்பர்களில் உணவு பரிமாறப்படுவதோடு கலப்பட தேயிலை புழக்கத்தில் உள்ளது. டீக்கடைகளில் செயற்கை நிறம் ஏற்றப்பட்ட தேயிலை துாள் பயன்படுத்துவதால் அதனை பருகுவோருக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.தன்னார்வலர்கள் கூறியதாவது:
விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடிய வாழை இலை பயன்பாட்டை அதிகளவு ஓட்டல்களில் பயன்படுத்துவதற்குநடவடிக்கை எடுக்க வேண்டும். வாழை இலை பயன்படுத்துவதற்கான உணவு கட்டணத்தை பெறும் ஒரு சில ஓட்டல் உரிமையாளர்கள் பச்சை பிளாஸ்டிக் பேப்பர்கள் மூலமாக உணவு பார்சல் செய்கின்றனர்.
அதேபோன்று பரோட்டா, தோசை, இட்லி, ப்ரைடு ரைஸ் உள்ளிட்ட உணவு பதார்த்தங்களை வெள்ளை நிற பிளாஸ்டிக் தாள்களை கொண்டு பார்சல் செய்கின்றனர். டீக்கடைகளில் போண்டா, வடை, பஜ்ஜி உள்ளிட்டவைகளை பார்சல் செய்வதற்கு தாள்களை பயன்படுத்துகின்றனர். அவற்றில் உள்ள காரியத்தின் மூலம் உடல் உபாதைகள் ஏற்படுகின்றது.
குழந்தைகளும், முதியவர்களும் பாதிப்படைகின்றனர். எனவே உணவு கலப்பட தடுப்பு பிரிவு அலுவலர்கள் உரிய முறையில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் மக்காத தன்மை உடைய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திடுவதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும். அவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும்.
முன்பு கடைகள் தோறும் ஆய்வு செய்த நிலை மாறி தற்போது பெயரளவில் ஆய்வு செய்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.