ADDED : ஆக 21, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை:திருவாடானை, தொண்டியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது ஒரு மாதத்திற்கு முன்பு குறைந்த காற்றழுத்தம் காரணமாக பரவலாக மழை பெய்தது.
இதனால் வெயில் தாக்கம் தணிந்து இதமான சூழல் காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்த னர். இந்நிலையில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதி கரித்துள்ளது.
இதனால் மக்கள் பகல் நேரங்களில் வீடுகளில் முடங்கியுள்ளனர். மக்கள் கூறுகையில், அக்னி நட்சத்திரம் முடிந்தது. இனி வெயில் தாக்கம் குறைவாக இருக்கும் எதிர்பார்த்தோம். ஆனால் பருவ நிலை மாற்றத்தால் கடும் வெயிலாக உள்ளது.
ரோட்டில் டூவீலரில் செல்லும் போது முகத்தில் வெப்பக் காற்று வீசுகிறது என்றனர்.