/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
/
இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
ADDED : நவ 27, 2025 06:35 AM

ராமநாதபுரம்: இந்திய அரசி யலமைப்பு தினத்தை (நவ.,26) முன்னிட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் உறுதிமொழி எடுத்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் உட்பட அரசு அலு வலர்கள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. கல்லுாரி தாளாளர் மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்த் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழியை கூற அவரைத் தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மதுரை சி .எஸ். ஐ., பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜம்ப்ரோ அரசியலமைப்பு குறித்து விரிவாக பேசினார். அனைத்து மாணவர்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட் டத்தின் சிறப்பம்சங்கள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டிகள் நடந்தது.

