/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இருளில் மூழ்கிய இந்திரா நகர் பஸ் ஸ்டாப்: பயணிகள் பாதிப்பு
/
இருளில் மூழ்கிய இந்திரா நகர் பஸ் ஸ்டாப்: பயணிகள் பாதிப்பு
இருளில் மூழ்கிய இந்திரா நகர் பஸ் ஸ்டாப்: பயணிகள் பாதிப்பு
இருளில் மூழ்கிய இந்திரா நகர் பஸ் ஸ்டாப்: பயணிகள் பாதிப்பு
ADDED : டிச 21, 2024 06:53 AM
ஆர்.எஸ்.மங்கலம்: தேசிய நெடுஞ்சாலை இந்திரா நகர் பஸ் ஸ்டாப் பகுதியில் மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.
திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, ஆர்.எஸ்.மங்கலம் அருகே இந்திரா நகர் பஸ் ஸ்டாப் அமைந்துள்ளது. இந்த பஸ் ஸ்டாப்பில் இருந்து சுற்றுப்புற பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைகின்றனர்.
மேலும் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களும், மாலையில் பணி முடிந்து இந்த பஸ்ஸ்டாண்டில் இருந்தே ஊருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பஸ்ஸ்டாப் பகுதி கடந்த சில வாரங்களாக இருள் சூழ்ந்துள்ளது.
ரோட்டோரம் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியாததால் பஸ் ஸ்டாப் வரும் பயணிகளும் அப்பகுதி பொதுமக்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.