/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திரவிழா துவக்கம்
/
சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திரவிழா துவக்கம்
சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திரவிழா துவக்கம்
சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திரவிழா துவக்கம்
ADDED : மார் 15, 2024 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே குளபதம் ஊராட்சிக்குட்பட்ட வைகை கிராமத்தில் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழாவிற்கான காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று மாலை 4:30 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மார்ச் 25ல் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு வன்னிவிநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் பக்தர்களால் வீதி உலா நடக்கிறது.