/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஈ.சி.ஆர்., ரோட்டில் நடைபாதை கோடு அமைக்க வலியுறுத்தல்
/
ஈ.சி.ஆர்., ரோட்டில் நடைபாதை கோடு அமைக்க வலியுறுத்தல்
ஈ.சி.ஆர்., ரோட்டில் நடைபாதை கோடு அமைக்க வலியுறுத்தல்
ஈ.சி.ஆர்., ரோட்டில் நடைபாதை கோடு அமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 06, 2025 04:03 AM
ஆர்.எஸ்.மங்கலம், : கிழக்கு கடற்கரை சாலையில் ரோட்டில் இருபுறங்களிலும் பாதசாரிகள் மற்றும் டூவீலரில் செல்பவர்களுக்கான வழித்தட எச்சரிக்கை கோடு அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலை, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, சம்பை, உப்பூர், ஏ.மணக்குடி, புதுப்பட்டினம், தொண்டி, எஸ்.பி. பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய வழித்தடமாக இந்த ரோடு உள்ளது.
இந்த ரோட்டின் வழியாக பல்வேறு மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம், தேவிபட்டினம், உத்திரகோசமங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆன்மிக சுற்றுலா செல்லும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில் எதிர், எதிர் வாகனங்கள் தனித்தனி வழித்தடத்தில் செல்லும் வகையில் ரோட்டின் மையத்தில் மட்டுமே கோடு அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் பஸ், கார் மற்றும் கனரக வாகனங்கள் எளிதாக சென்று வரும் நிலை உள்ளது.
அதிக வாகனங்கள் சென்று வரும் நிலையில் பாதசாரிகள் மற்றும் டூவீலரில் செல்பவர்கள் ரோட்டில் இருபுறமும் பாதுகாப்பாக தனி வழித்தடத்தில் செல்லும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் எல்லைக்கோடு வரையப்படாததன் காரணமாக டூவீலர் மற்றும் பாதசாரிகள் விபத்துகளில் சிக்குவது அதிகரித்து வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ரோட்டின் இருபுறமும் டூ வீலர், பாதசாரிகள் சென்று வரும் வகையில் ரோட்டோர எல்லைக்கோடு வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.