/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
/
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூன் 18, 2025 11:35 PM
ராமநாதபுரம்:தமிழக அரசு உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராமநாதன் முன்னிலை வகித்தார். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பணியிட மாறுதலில் ஒரு சில குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். தொலை துாரம் பயணிக்கும் அலுவலர்கள் பணியிடங்கள் அருகில் உள்ள அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும். இளநிலை உதவியாளராக இருந்து உதவியாளர் நிலையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட துணைத் தலைவர்கள் சத்யகிரி, முனியராஜ், ஜீவா, மாவட்டச் இணை செயலாளர் வைரவ முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.