/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவ காப்பீடு திட்டத்தில் வயதை 60--வதாக குறைப்பதற்கு வலியுறுத்தல்
/
மருத்துவ காப்பீடு திட்டத்தில் வயதை 60--வதாக குறைப்பதற்கு வலியுறுத்தல்
மருத்துவ காப்பீடு திட்டத்தில் வயதை 60--வதாக குறைப்பதற்கு வலியுறுத்தல்
மருத்துவ காப்பீடு திட்டத்தில் வயதை 60--வதாக குறைப்பதற்கு வலியுறுத்தல்
ADDED : டிச 24, 2024 04:19 AM
திருவாடானை: மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில் 70 வயது கடந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தில் வயது வரம்பை 60 ஆக குறைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு தேவையான மருத்துவ காப்பீட்டை வழங்குகிறது. இதில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 70 வயதை கடந்த முதியவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டம் அறிவிக்கபட்டுள்ளது. 70 வயதை 60 ஆக குறைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
குளத்துார் ஊராட்சி தலைவர் குமார் கூறியதாவது:
திருவாடானை தாலுகாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக கிராமங்களில் தினக்கூலி தொழிலாளர்கள் நிறைய பேர் பணம் செலவழித்து சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். தற்போதைய உணவு பழக்கம், மன அழுத்தம், பொருளாதார நெருக்கடி உட்பட பல்வேறு காரணங்களால் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஏராளமானோர் நோய்களுக்கு ஆளாகின்றனர்.
மக்கள் 60 வயதை எட்டும் நிலையில் நீரழிவு, ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு பண வசதி இல்லாமல் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழப்பிற்கு ஆளாகின்றனர். எனவே 60 வயது கடந்த அனைவருக்கும் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.
---