/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயணிகள் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்
/
பயணிகள் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 12, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: கிழக்கு கடற்கரை சாலை திருப்பாலைக்குடி பழங்கோட்டை பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை அமைக்க பயணிகள் வலியுறுத்தினர்.
கிழக்கு கடற்கரை சாலை திருப்பாலைக்குடி பகுதியில் அதிகளவில் மீனவ குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியினர் பழங்கோட்டை பஸ் ஸ்டாப்பில் இருந்து வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர்.
இதனால் பழங்கோட்டை பஸ் ஸ்டாப்பில் அதிகளவிலான பயணிகள் வந்து செல்லும் நிலை உள்ளது. இங்கு நிழற்குடை இல்லாததால் மழை மற்றும் வெயிலில்பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

