/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைவில் இன்ஸ்பெக்டர் நியமனம்
/
எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைவில் இன்ஸ்பெக்டர் நியமனம்
எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைவில் இன்ஸ்பெக்டர் நியமனம்
எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைவில் இன்ஸ்பெக்டர் நியமனம்
ADDED : ஆக 26, 2025 11:44 PM
திருவாடானை: திருவாடானை சப்-டிவிஷனில் எஸ்.ஐ., அந்தஸ்தில் இருந்த எஸ்.பி. பட்டினம் போலீஸ்ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. விரைவில் இன்ஸ்பெக்டர் நியமிக்கபடுவார் என திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் கூறினார்.
அவர் கூறியதாவது: பரமக்குடியில் செப்.,11ல் இமானுவேல்சேகரன் நினைவு நாள் நடைபெறவுள்ளது. கமுதி அருகே பசும்பொன்னில் அக்., 29, 30 ல் முத்துராமலிங்கதேவர் குருபூஜை நடைபெறவுள்ளது. திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிலிருந்து செல்பவர்கள் சொந்த வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் செல்ல வேண்டும். பிளக்ஸ் போர்டுகளில் ஜாதி உணர்வை துாண்டும் வகையில் வாசகங்கள் இருக்ககூடாது.
இது குறித்து பிளக்ஸ் போர்டு தயார் செய்பவர்களிடம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இது தவிர தினமும் ஒரு கிராமத்தில் மாலை 5:00 மணிக்கு போலீசார் சென்று விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகின்றனர். திருவாடானை சப்-டிவிஷனில் திருவாடானை, தொண்டி, திருப்பாலைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், எஸ்.பி.பட்டினம் போலீஸ்ஸ்டேஷன்கள் உள்ளன.
இதில் எஸ்.பி.பட்டினத்தை தவிர மற்ற போலீஸ்ஸ்டேஷன்கள் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ளது. தற்போது இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் எஸ்.பி.பட்டினம் போலீஸ்ஸ்டேஷன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஓரியூர், பாசிபட்டினம், சோழகன்பேட்டை, சிறுகம்பையூர், வெள்ளையபுரம், புல்லக்கடம்பன் உள்ளிட்ட 72 கிராமங்கள் எஸ்.பி.பட்டினம் போலீஸ்ஸ்டேஷனில் உள்ளது. விரைவில் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படுவார் என்றார்.