/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாய்கள் கூடாரமாகும் அரசு கலைக்கல்லுாரி அப்புறப்படுத்த நடவடிக்கை தேவை

ADDED : ஆக 26, 2025 11:45 PM
பரமக்குடி: பரமக்குடி அரசு கலைக் கல்லுாரி வளாகத்தில் நாய்கள் சுற்றித் திரிவதுடன் அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவதால் மாணவர்கள் முகம் சுளிக்கின்றனர்.
பரமக்குடி அரசு கலைக் கல்லுாரியில் 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். காலை, மதியம் என இரண்டு ஷிப்டுகளாக கல்லுாரி இயங்குகிறது. கல்லுாரி வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி வருகின்றன. இவைகளுக்கு அங்குள்ள சிலர் பிஸ்கட், வடை உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுப்பதால் வளாகத்திலேயே தங்குகின்றன.
மேலும் சில நாய்கள் உணவு கொடுப்பவர்களின் பின்னால் சென்று வகுப்பறைக்கு முன்பு மற்றும் முகப்பு வராண்டாவில் படுத்துக் கொள்கின்றன. இவை அவ்வப்போது ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்வதுடன் புதிதாக செல்வோரை பார்த்து குரைக்கின்றன. இருபாலரும் படிக்கும் கல்லுாரியில் நாய்கள் அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவதால் முகம் சுளிக்கும் நிலை இருக்கிறது.
ஆகவே கல்லுாரி வளாகத்தில் பாதுகாப்பு கருதி நாய்களை அப்புறப்படுத்த நிர்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.