/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு
/
இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு
இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு
இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : நவ 04, 2025 10:14 PM
ராமநாதபுரம்: மருத்துவக் காப்பீடு செய்தும் முழு இன்சூரன்ஸ் தெகையை தர மறுத்த நிறுவனம் சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு ராமநாதபுரம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
ராமநாதபுரம் சேதுபதி நகரை சேர்ந்தவர் செல்வம் 52. கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றுகிறார். இவரது மகளுக்கு 2020ல் உடல் நலம் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மதுரையில் தனியார் மருத்துவமனையில் உயர்சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 642 செலவு செய்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவ காப்பீடு கோரி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் ரூ.1 லட்சத்து 5224 மட்டும் வழங்கப்பட்டுள்ளது. முழுத்தொகை வழங்கக் கோரி பலமுறை முறையிட்டும் இன்சூரன்ஸ் நிறுவனம் தர மறுத்துள்ளது.இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் 2024ல் புகார் மனு அளித்தார்.
இம்மனுவை குறைதீர் ஆணைய தலைவர் பாலசுப்பிரமணியம், உறுப்பினர் குட்வின் சாலமோன் ராஜ் விசாரித்தனர். மருத்துவ செலவு செய்த மீதமுள்ள ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 418 ஐ இன்சூரன்ஸ் நிறுவனம் 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். மேலும் சேவை குறைபாடு காரணமாக மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு, வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

