நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவு ரத்த தானம் செய்ததில் திருப்புல்லாணி வட்டாரத்தில் உள்ள உத்தரகோசமங்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 500 யூனிட் அதிகளவு ரத்தம் சேகரித்து அளித்ததன் அடிப்படையில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டினார்.
கல்லுாரிகள் மற்றும் பொதுநல சங்கம் இவற்றில் இருந்து தன்னார்வலர்கள் மூலம் பெறக்கூடிய ரத்தம் முறையாக சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதே போன்று மாவட்டத்தில் பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பிலும் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் அதிகளவு ரத்தம் சேகரிப்பு பணியில் ஈடுபட்ட உத்தரகோசமங்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பாராட்டப்பட்டது.

