/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் உழவர்சந்தை... இருக்கு.. ஆனா இல்ல... விவசாயிகள் வருகையின்றி காலியான கடைகள்
/
ராமநாதபுரத்தில் உழவர்சந்தை... இருக்கு.. ஆனா இல்ல... விவசாயிகள் வருகையின்றி காலியான கடைகள்
ராமநாதபுரத்தில் உழவர்சந்தை... இருக்கு.. ஆனா இல்ல... விவசாயிகள் வருகையின்றி காலியான கடைகள்
ராமநாதபுரத்தில் உழவர்சந்தை... இருக்கு.. ஆனா இல்ல... விவசாயிகள் வருகையின்றி காலியான கடைகள்
ADDED : நவ 04, 2025 10:15 PM

தி.மு.க., ஆட்சிக் காலத்தில் மாவட்டத்தில்ராமநாதபுரம், பரமக்குடி, கமுதியில் ஆகிய இடங்களில் 2000 ம் ஆண்டில் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டது.ராமநாதபுரம் உழவர்சந்தைக்கு வாலாந்தரவை, உச்சிபுளி, பாண்டியூர், அரசடி வண்டல் ஆகிய பகுதிகளிலிருந்து கத்தரி, வெண்டைக்காய், தக்காளி, புடலை, கீரை ஆகியவை நேரடியாக விவசாயிகள் மூலம் கொண்டு வந்து விற்கப்படுகிறது.
வெளி மார்க்கெட்டை விட கிலோவிற்கு ரூ.10 வரை அனைத்து காய்கறிகளும் குறைவாக விற்கப்படுகிறது.மொத்தமுள்ள 48 கடைகளில் 5 கடைகளில் மட்டும் பெயரளவில் காய்கறிகள் விற்கின்றனர். இது போக மீதியுள்ள கடைகள் சும்மா கிடக்கின்றன. சில கடைகளில் பூ வியாபாரம் நடைபெறுகிறது.
அதே சமயம் உழவர்சந்தையில் அடையாள அட்டை வாங்கியுள்ள சில விவசாயிகள் அருகே சின்னக்கடை வீதி மற்றும் அரண்மனை பஜாரில் காய்கறிகள் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.விவசாயிகள், பொதுமக்கள் நன்மைக்காக திறக்கப்பட்ட உழவர்சந்தை பெயரளவில் செயல்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே ரோட்டோரத்தில் வியாபாரம் செய்வதை தடுத்து விவசாயிகள் உழவர்சந்தையில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தொடர்ந்து பாண்டியூர், அரசடி வண்டல் ஆகிய கிராமங்களில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.இருப்பினும் ரோட்டோரத்தில் விற்பனையை தடுத்து நடவடிக்கை எடுக்க நகராட்சி, போலீசாரிடம் மனு அளித்துள்ளோம்.
விரைவில் உழவர் உற்பத்திக்குழுவினர் மூலம் சிறுதானிய உணவு பொருட்கள் விற்பனை மையம் அமைக்கப்பட உள்ளது. புது பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டுள்ளதால் விற்பனை அதிகரிக்கும் என்பதால் அரண்மனை, சின்னக்கடை வீதியில்காய்கறி, பழங்கள், கீரை வியாபாரம் செய்யும் விவசாயிகளிடம் பேசி உழவர் சந்தையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.

