/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாற்றுத் திறானிகளுக்கு வட்டியில்லா கடன்
/
மாற்றுத் திறானிகளுக்கு வட்டியில்லா கடன்
ADDED : அக் 27, 2024 03:38 AM
திருவாடானை: கூட்டுறவு சங்கங்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மாற்றுத் திறானிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்க அலுவலர்கள் கூறியதாவது: கூட்டுறவு வங்கிகளில் பல்வேறு பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகிறது. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் மாற்றுத் திறானாளிகள் தொழில் துவங்க கடன் வழங்கப்படுகிறது. ரூ.50 ஆயிரம் வரையிலான தனிநபர் கடனுக்கு இரு நபர் பிணையம் அளிக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் வரை வட்டியில்லை. கடன் தேவைப்படுபவர்கள் அருகிலுள்ள கூட்டுறவு சங்கங்களை அணுகலாம் என்றனர்.