/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சர்வதேச போதை ஒழிப்பு தினம் மகளிர் கல்லுாரிகளில் விழிப்புணர்வு
/
சர்வதேச போதை ஒழிப்பு தினம் மகளிர் கல்லுாரிகளில் விழிப்புணர்வு
சர்வதேச போதை ஒழிப்பு தினம் மகளிர் கல்லுாரிகளில் விழிப்புணர்வு
சர்வதேச போதை ஒழிப்பு தினம் மகளிர் கல்லுாரிகளில் விழிப்புணர்வு
ADDED : ஜூன் 26, 2025 12:56 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மகளிர் கல்லுாரிகளில்போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம்சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட முதன்மை நீதிபதிமெஹபூப் அலிகான் வழிகாட்டுதலின் படி ராமநாதபுரம் அரசு பெண்கள்கல்லுாரி, முகமது சதக் ஹமீதியா கலை அறிவியல் பெண்கள் கல்லுாரியில்சார்பு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் நீதிபதி ஆர்.சரவணபாபு விழிப்புணர்வு உரையாற்றினார்.
போதையால் ஏற்படும் தீங்குகள், சமூகத்தில் போதைப்பொருள்களால் ஏற்படும்தாக்கங்கள், போதைப் பொருள்களை ஒழிக்க அரசு எடுத்து வரும்நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
முன்னதாக மாணவிகள் போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர். ஏற்பாடுகளைமாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செய்திருந்தது.