/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பணிப் பாதுகாப்பு சட்டம் வேண்டும் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிறுவனத்தலைவர் பேட்டி

ADDED : நவ 22, 2024 04:00 AM

ராமநாதபுரம்: ஆசிரியர்களுக்கு தனியாக பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்க நிறுவனத் தலைவர் ஜீ.கிருஷ்ணன் ராமநாதபுரத்தில் கூறியதாவது:
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசு கொலை குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து ஆசிரியர்கள் பள்ளிகளில் தாக்கப்படுவது, உயிரிழப்பதை தடுக்க வேண்டும். எனவே டாக்டர்கள், மருத்துவமனைகளுக்கு தனியாக பணிப் பாதுகாப்பு சட்டம் இருப்பது போன்று பள்ளி ஆசிரியர்களுக்கும் தனியாக பணிப் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி, புதிய நெறிமுறைகள், விதிகளுடன் சட்டங்களை வகுத்து அரசு வெளியிட வேண்டும் என்றார்.