/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீட்டில் துாங்கிய பரோட்டா மாஸ்டர் உடலில் கொப்பளம் ஆசிட் வீச்சா என விசாரணை

ADDED : நவ 11, 2024 04:04 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பரக்கத்வீதியில் வீட்டில் தூங்கிய அம்ஜத்கான் 34, உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டதுக்கு ஆசிட் வீச்சு அல்லது விஷக் கடி காரணமாக என போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் பரக்கத் வீதி அப்துல்காதர் மகன் அம்ஜத்கான் மாற்றுத்திறனாளி. இவர் கோழியார்கோட்டையில் உள்ள ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம்(நவ.,9) இரவு வீட்டில் துாங்கிய போது உடம்பில் அரிப்பு ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் கொப்பளங்கள் ஏற்பட்டுஉள்ளது.
தொடர்ந்து உறவினர்கள் அம்ஜத்கானை ஆர்.எஸ்.மங்கலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்த புகாரில்ஆர்.எஸ்.மங்கலம் எஸ்.ஐ., முகமது சைபுல் கிஷாம் அருகில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தார். சம்பவம் நடந்த இரவில் யாரும் அவரது வீட்டிற்கு யாரும் செல்லவில்லை என்றும், ஆசிட் வீசப்பட்டதற்கான தடயங்கள் ஏதும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும் ஆசிட் வீச்சு அல்லது விஷ பூச்சிகள் கடி என கொப்பளம் ஏற்பட்டதற்கான காரணங்களை விசாரித்து வருகின்றனர்.