/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஐ.ஓ.பி., ஏ.டி.எம்., திறப்பு: மண்டல மேலாளர் தகவல்
/
ஐ.ஓ.பி., ஏ.டி.எம்., திறப்பு: மண்டல மேலாளர் தகவல்
ADDED : டிச 29, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானையில் இந்தியன் ஓவர்சிஸ் பாங்க் சார்பில் ஏ.டி.எம்., மையம் திறக்கப்படும் என சென்னை மண்டல மேலாளர் லட்சுமி வெங் கடேஷ் தெரிவித்தார்.
அவர் நேற்று முன்தினம் ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது திருவாடானையை சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற உதயகுமார், திருவாடானையில் ஐ.ஓ.பி. வங்கி சார்பில் ஏ.டி.எம்., திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விரைவில் ஏ.டி.எம்., மையத்தை திறக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல மேலாளர் லட்சுமி வெங்கடேஷ் கூறினார்.

