/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விழிப்புணர்வு போர்டில் ஐ.பி.சி., சட்டம் : குழப்பத்தில் மக்கள்
/
விழிப்புணர்வு போர்டில் ஐ.பி.சி., சட்டம் : குழப்பத்தில் மக்கள்
விழிப்புணர்வு போர்டில் ஐ.பி.சி., சட்டம் : குழப்பத்தில் மக்கள்
விழிப்புணர்வு போர்டில் ஐ.பி.சி., சட்டம் : குழப்பத்தில் மக்கள்
ADDED : ஆக 26, 2025 03:32 AM

திருவாடானை: குழந்தைகள் நல அலுவலகம் சார்பில் வைக்கப்பட்ட போர்டில் பி.என்.எஸ்., சட்டத்தை பின்பற்றாமல் ஐ.பி.சி. என எழுதப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
திருவாடானை பஸ்ஸ்டாண்ட் முன்பு குழந்தை திருமணத்தை தடை செய்யும் வகையில் குழந்தைகள் நல அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் போக்சோ ஐ.பி.சி.,யின் கீழ் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தையுடன் திருமணம் செய்து கொள்வதும், திருமணத்திற்கு பிறகு உடலுறவு கொள்வதும் கற்பழிப்பு குற்றமாகும் என எழுதப்பட்டுள்ளது. இந்திய அரசு ஐ.பி.சி., சட்டத்திற்கு பதிலாக பி.என்.எஸ்.,என்ற புதிய சட்டத்தை அறி முகப்படுத்தியுள்ளது. இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு மாற்றாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி வாதங்கள், விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் குழந்கைள் நல அலுவலர்களால் பழைய ஐ.பி.சி., சட்டம் என எழுதப்பட்டிருப்பது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.