/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் பாலத்தில் இரும்பு பிளேட் சேதம்
/
பாம்பன் பாலத்தில் இரும்பு பிளேட் சேதம்
ADDED : நவ 18, 2025 04:02 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் இரும்பு பிளேட் சேதமடைந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பாம்பன் கடலில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். 37 ஆண்டுகள் கடந்த இப்பாலம் பலவீனமாகி நடுவில் உள்ள பிங்கர் ஜாயின்ட் எனும் இரும்பு பிளேட் அடிக்கடி சேதமடைவதும், பின் பொறியாளர்கள் சரி செய்வதும் வழக்கமாக உள்ளது.
இரு நாட்களுக்கு முன் மீண்டும் இரும்பு பிளேட் சேதமடைந்து, போல்ட்டுகள் வெளியில் நீண்டபடி உள்ளதால், வாகனங்கள் செல்லும்போது டயர்கள் வெடித்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சேதமடைந்த இரும்பு பிளேட் மீது வாகனங்கள் செல்லும்போது 'தடதட' என சத்தம் எழுந்து அதிர்வு ஏற்படுவதால் பயணிகள் அச்சமடைகின்றனர்.
சேதமடைந்த இரும்பு பிளேட்டை சரி செய்து நிரந்தர தீர்வு காண பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

