/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டோர குளத்தில் பாய்ந்த கார் உள்ளே இருந்தவர்கள் உயிர் தப்பினர்
/
ரோட்டோர குளத்தில் பாய்ந்த கார் உள்ளே இருந்தவர்கள் உயிர் தப்பினர்
ரோட்டோர குளத்தில் பாய்ந்த கார் உள்ளே இருந்தவர்கள் உயிர் தப்பினர்
ரோட்டோர குளத்தில் பாய்ந்த கார் உள்ளே இருந்தவர்கள் உயிர் தப்பினர்
ADDED : நவ 18, 2025 04:02 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் வெண்ணத்துார் டோல்கேட் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் குளத்திற்குள் இறங்கியது. அதிர்ஷ்டவசமாக காருக்குள் இருந்த 6 பேரும் உயிர் தப்பினர்.
ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜன் 65, நேற்று காலை தனது குடும்பத்தினருடன் தேவிபட்டினத்திற்கு சென்று சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளார். அங்கிருந்து மனைவி, மகன், மருமகள், இரண்டு பேரக்குழந்தைகளுடன் ஆர்.எஸ்.மங்கலத்திற்கு காரில் புறப்பட்டனர்.
காலை 11:00 மணிக்கு திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வெண்ணத்துார் டோல்கேட் அருகே கார் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர குளத்தில் இறங்கியது.
டோல்கேட் பகுதியில் இருந்த ஊழியர்கள் குளத்தில் இறங்கி காரில் இருந்தவர்களை உயிருடன் மீட்டனர். தண்ணீர் அதிகம் இல்லாததால் அனைவரும் தப்பினர். காரை ஓட்டிய நாகராஜன் காயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள் காயம் இன்றி தப்பியுள்ளனர். தேவி பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.