/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடி பெரிய கண்மாயில் கொட்டப்படும் குப்பை கழிவு கண்டுகொள்ளாத பாசனத் துறை அதிகாரிகள்

ADDED : நவ 18, 2025 03:58 AM
சாயல்குடி: சாயல்குடி பெரிய கண்மாய் 535 ஹெக்டேரில் அமைந்துள்ளது. கண்மாய் கரைப்பகுதியை ஒட்டி சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்கள் வரிசையாக அமைந்துள்ளது.
கண்மாய் கரையோரம் வசிப்பவர்கள் குழாய் பதித்து கண்மாய்க்குள் கழிவுநீரை விட்டும் பிளாஸ்டிக் கழிவு குப்பையை கொட்டி கண்மாய் பகுதியை குப்பை போடும் இடமாக மாற்றி வருகின்றனர்.
சாயல்குடியை சேர்ந்த தன்னார்வலர் அனிபா அண்ணா கூறியதாவது:
சாயல்குடி பெரிய கண்மாய் கரையோரப் பகுதியில் அதிகளவு குப்பை கொட்டப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரக் கேடாக உள்ளது. சீமை கருவேல மரங்கள் அதிகளவு கண்மாயில் வளர்ந்துள்ளது.
இதனால் எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீரை தேக்க இயலாத நிலை ஏற்படுகிறது.
கண்மாய் நீர் வழித்தடங்களை முறையாக துார்வாரியும் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று இருவேலி வரத்து கால்வாய் ஓடையை மீட்டுத் தர வேண்டும். அருப்புக்கோட்டை சாலை பாலத்தில் இருந்து வரக்கூடிய உபரி நீர் இருவேலி வரத்துக்கால்வாய் வழியாக வந்து இலந்தைகுளம் கண்மாய்க்கு சென்று மூக்கையூர் கடலில் கலக்கிறது.
தற்போது ஓடையின் நீர்வழித்தடம் நாளுக்கு நாள் குறுகி வருகிறது. ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதால் அப்பகுதி புதர் மண்டியுள்ளது. எனவே ஓடையை மீட்டெடுக்கவும் நீர்மட்டத்திற்கு ஏற்றவாறு மூன்று இடங்களில் சிறிய அளவிலான (தத்து) தடுப்பணை கட்டி நீரை தேக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றார்.