/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நிரம்பியது விளங்குளத்துார் ஊருணி
/
நிரம்பியது விளங்குளத்துார் ஊருணி
ADDED : டிச 09, 2024 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் கிராமத்தில் பெய்த மழைக்கு ஊருணி நிரம்பியுள்ளது.
முதுகுளத்துார் -பரமக்குடி ரோடு விளங்குளத்துார் பஸ்ஸ்டாப் பின்புறம் ஊருணி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யாததால் ஊருணி தண்ணீர் இல்லாமல் வறண்டிருந்தது. சில மாதத்திற்கு முன்பு வரத்து கால்வாய் துார்வாரப்பட்டது.
தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பருவ மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில் ஊருணி முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பல ஆண்டுகளுக்கு பிறகு விளங்குளத்துார் ஊருணி நிரம்பியுள்ளது.