/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனை இரண்டாக பிரிப்பது அவசிய தேவை
/
கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனை இரண்டாக பிரிப்பது அவசிய தேவை
கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனை இரண்டாக பிரிப்பது அவசிய தேவை
கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனை இரண்டாக பிரிப்பது அவசிய தேவை
ADDED : ஜூன் 05, 2025 01:02 AM
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனை தனியாக பிரித்து கலெக்டர் அலுவலக போலீஸ் ஸ்டேஷனை உருவாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் நகர் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் நகர் பகுதி மற்றும் அதிகமான கிராமங்களை கொண்ட பகுதியாகவும் குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதியாகவும் கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் பகுதி உள்ளது. கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் தற்போது கலெக்டர் அலுவலகத்திற்குள் உள்ளது. இங்கு குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு காரணமாக சிறு, சிறு வழக்குகள் பதிவு செய்யப்படாமல் பேச்சு வார்தையில் சமரசம் செய்து அனுப்புகின்றனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த தீர்வும் கிடைப்பதில்லை.
எனவே கலெக்டர் அலுவலகத்திற்கு என தனியாக போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வழக்கறிஞர் மாதவன் கூறியதாவது: கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் அதிக பகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இங்கு குற்ற வழக்குகளை நிர்வாகம் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. ராமநாதபுரம் புறநகர் பகுதிகளை தனியாக பிரித்தும், கலெக்டர் அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து கலெக்டர் அலுவலக போலீஸ் ஸ்டேஷன் உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கப்படும் பட்சத்தில் குற்றங்களை தடுக்க போதுமான போலீசார், அதிகாரிகள் இருப்பதால் ஒரளவுக்கு குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.