/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அருங்காட்சியகம் திட்டம் அறிவித்து 3 ஆண்டாகிறது; ராமநாதபுரத்தில் வாடகைக்கு கட்டடம் தேடும் அவலம்

ADDED : மார் 16, 2025 12:23 AM

ராமநாதபுரம் கேணிக்கரை ரோட்டில் ஜவான பவன் கட்டடத்தில் முதல் தளத்தில் 2008 முதல் அரசு அருங்காட்சியகம் உள்ளது. அருங்காட்சியகத்தில் 65 கற்சிலைகள், பழமையான மரத்திலான சிற்பங்கள், ஓவியங்கள், அரியவகை நாணயங்கள், ஓலைச்சுவடிகள் என நுாற்றுக்கணக்கான பழங்கால பொருட்கள் உள்ளன.
இந்த கட்டடம் 1990ல் கட்டப்பட்டு போதிய பராமரிப்பில்லாமல் தற்போது கூரை சிமென்ட் பூச்சுகள் இடிந்து கீழே விழுகிறது. பல இடங்களில் கட்டடத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.பலத்த மழை பெய்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து அருங்காட்சியகத்தை பார்வையிட மக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அலுவலர்கள் மட்டும் வந்து செல்கின்றர். 2022ல் புதிய அரசு அருங்காட்சியகம் ரூ.5 கோடியில் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்காக மண்டபத்தில் 5 ஏக்கரில் இடம் தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில் அழகன்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கொண்டு ரூ.21 கோடியில் நாவாய் (மரக்களம்) அருங்காட்சியம் அமைக்கப்படும் என தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவித்து கிடப்பில் உள்ள அரசு அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை விரைவில் துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.