/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜாக்டோ-ஜியோ மறியல் போராட்டம்: கைது 231
/
ஜாக்டோ-ஜியோ மறியல் போராட்டம்: கைது 231
ADDED : ஜன 30, 2024 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஜாக்டோ - ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ரோடு மறியலில் ஈடுப்பட்ட 231 பேரை போலீசார் கைது செய்தனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். முடக்கியுள்ளசரண்டர் விடுப்பை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலம் முன்பு ராமேஸ்வரம்ரோட்டில் மறியல் போராட்டாம் நடந்தது.
ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், முருகேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சங்க தலைவர் பழனிக்குமார் உட்பட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.