/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் ஜல்ஜீவன் திட்ட பணிகள் மூன்று மாதங்களாக நிறுத்தம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் ஜல்ஜீவன் திட்ட பணிகள் மூன்று மாதங்களாக நிறுத்தம்
ஆர்.எஸ்.மங்கலத்தில் ஜல்ஜீவன் திட்ட பணிகள் மூன்று மாதங்களாக நிறுத்தம்
ஆர்.எஸ்.மங்கலத்தில் ஜல்ஜீவன் திட்ட பணிகள் மூன்று மாதங்களாக நிறுத்தம்
ADDED : ஏப் 24, 2025 06:46 AM

ஆர்.எஸ்.மங்கலம்: மத்திய அரசின் வீடுகள் தோறும் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டப் பணிகள் கமிஷன் பிரச்னையால் ஆர்.எஸ்.மங்கலத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில் ஜல் ஜீவன் திட்டத்தை 2019 ஆக.15ல் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 2024 க்குள் இத்திட்ட பணிகளை முடித்து வீடுகளுக்கு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது.
கொரோனா காலமாக இருந்ததால் குறிப்பிட்ட நாட்களில் பணிகள் நிறைவடையாத நிலையில் சுமார் 15.19 கோடி கிராமப்புற வீடுகளுக்கு தற்போது குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது 78 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் எஞ்சிய பணிகளையும் விரைவில் முடித்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.
இந்த நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இத்திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் பைப்லைன் பதித்தல், மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டும் பணிகள் துவங்கின. இந்நிலையில் பேரூராட்சி பகுதியில் நடைபெறும் ஜல்ஜீவன் திட்டத்திற்கான ஒப்பந்த தொகையில் குறிப்பிட்ட தொகையை கமிஷன் கேட்பதால் திட்டப்பணிகள் மூன்று மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி கூறுகையில், பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதற்கு இந்த காரணங்கள் இருப்பதாக தெரியவில்லை. பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மூலம் ஒப்பந்ததாரர்களிடம் வலியுறுத்தி உள்ளோம். விரைவில் பணிகள் நடைபெறும் என்றார்.