நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாரிமுத்து தலைமையில் ஜமாபந்தி நடந்தது. தாசில்தார் காதர் முகைதீன் முன்னிலை வகித்தார்.
கமுதி கிழக்கு உள்வட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் உள்ள கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சேதுராமன், துணை தாசில்தார் கீதா, மண்டல துணை தாசில்தார்கள் வெங்கடேஸ்வரன், வேலவன் பங்கேற்றனர்.