/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
2 கிலோ தங்கத்துடன் நகை வியாபாரி கடத்தல்
/
2 கிலோ தங்கத்துடன் நகை வியாபாரி கடத்தல்
ADDED : டிச 02, 2024 04:31 AM
திலகர்திடல்: சென்னையிலிருந்து ௨ கிலோ தங்கத்துடன் வந்த நகை வியாபாரியை கடத்திய 5 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 60; நகை வியாபாரி. இவர், அடிக்கடி சென்னை சென்று நகைகளை வாங்கி, மதுரை உள்ளிட்ட இடங்களில் கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து ரயிலில் அதிகாலை 2 கிலோ தங்கத்துடன் மதுரை வந்த பாலசுப்பிரமணியை, ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே ஐந்து பேர் காரில் கடத்தினர். மேலுார் பகுதிக்கு அழைத்து சென்று மிரட்டி, 2 கிலோ தங்கத்தை பறித்துக்கொண்டு அவரை இறக்கிவிட்டு தப்பினர்.
திலகர்திடல் போலீசார் விசாரிக்கின்றனர். விசாரணையில் சென்னை நகை புரோக்கர், இதில் மூளையாக செயல்பட்டது தெரிந்தது. போலீசில் சிக்கிய அவர் உட்பட கூட்டாளிகள் ஐந்து பேரிடம் விசாரணை நடக்கிறது.