/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
12 ஜோதிர்லிங்க தலங்களுக்கு ஸ்கேட்டிங் யாத்திரை செல்லும் ஜார்க்கண்ட் வாலிபர்

UPDATED : அக் 24, 2025 06:53 AM
ADDED : அக் 24, 2025 03:41 AM

ராமநாதபுரம்: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அஜய்குமார் விஸ்வகர்மா 27, தேசியக்கொடி ஏந்தி அந்த மாநிலத்தில்துவங்கி காசி வரை 5000 கி.மீ., 12 ஜோதிர்லிங்கதலங்களுக்கு ஸ்கேட்டிங் யாத்திரை செல்கிறார்.
அஜய்குமார் விஸ்வகர்மா ஸ்கேட்டிங் யாத்திரையை ஆகஸ்டில் துவக்கினார். நேற்று ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வழியாகராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:
ராமேஸ்வரத்தில்தரிசனம் முடிந்து கன்னியாகுமரி, கோவை சென்று அங்கிருந்து காசிவிஸ்வநாதர் கோயிலில் ஸ்கேட்டிங் யாத்திரையை நிறைவு செய்ய உள்ளேன்.இந்த யாத்திரை மூலம் 12 ஜோதிர்லிங்க தலங்களைதரிசனம் செய்து சனாதன தர்மம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கிறேன் என்றார்.