ADDED : அக் 28, 2025 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே பனைக்குளம் பகுருதீன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்கள் பயனடையும் வகையில் வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. புதுவலசை ஆர்.டி.சி.சி., வங்கி மேலாளர் முத்து முருகன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அலோசியா ஷோபா முன்னிலை வகித்தார்.
எதிர்காலத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் படிப்புகள் குறித்தும், தற்போதுள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. தொழிற்கல்வி ஆசிரியர் லோகேஸ்வரன், உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

