/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சி ஒன்றிய கண்மாய்களை நீர்வளத்துறையில் இணையுங்கள்
/
ஊராட்சி ஒன்றிய கண்மாய்களை நீர்வளத்துறையில் இணையுங்கள்
ஊராட்சி ஒன்றிய கண்மாய்களை நீர்வளத்துறையில் இணையுங்கள்
ஊராட்சி ஒன்றிய கண்மாய்களை நீர்வளத்துறையில் இணையுங்கள்
ADDED : டிச 07, 2024 05:38 AM
ராமநாதபுரம்: -தமிழகத்தில் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களை பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையில் இணைக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் அரசுக்கு வலியுறுத்தினர்.
பருவமழைக் காலங்களில் கண்மாய்களின் பராமரிப்பு குறித்து அரசு எந்த முயற்சியும் எடுப்பதில்லை. ஆற்றுப்பாசனத்தில் வரும் பெரும்பாலான கண்மாய்கள் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. பொதுப்பணித்துறையினர் இந்த கண்மாய்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கின்றனர்.
ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் பல ஆயிரம் கண்மாய்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளன. இவை ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. ஊராட்சி ஒன்றிய கண்மாய்களில் பராமரிப்பு பணிகளை முறையாக செய்வதில்லை.
பல கண்மாய்கள் இருந்த இடம் தெரியாமல்துார்ந்து போய்விட்டன. பல கண்மாய்கள் அதிகாரிகளுக்கே தெரியாத நிலை உள்ளது.பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையுடன் ஒன்றிய கண்மாய்களை இணைத்தால் முறையாக பராமரிப்பு பணிகளை செய்ய முடியும் என விவசாயிகள் சங்கத்தினர் அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர்.